Description

Presently the Tiruppur corporation receives water from 3 supply schemes, scheme 1& 2 with river Bhavani as source and scheme 3 with river Cauvery as a source

Scheme 1 was commissioned in 1965 and is owned and maintained by Tiruppur corporation, Scheme 2 was commissioned in 1993 and is operated and maintained by TWAD board, Scheme 3 was commissioned in 2005 and is owned, operated and maintained by NTADCL

Existing distribution system is designed for 90 lpcd for a population of 6,39,000. The project was due for an upgrade as Scheme 1 pipes were more than 50 years old, scheme 2 pipes were more than 25 years old and the expanded corporation area also does not have a proper distribution system.

The population of the expanded corporation as per 2011 census is 8.78 lakhs and projected population for years 2020, 2035 and 2050 are expected to be 10.80 lakh, 14.80, and 19.50 lakh respectively and as per the CPHEEO norms rate of LPCD is 135 LPCD and is estimated to be 226.20 MLD and 297.4 MLD for intermediate and ultimate stages. Further the extended area of corporation does not have a planned water distribution system.

Project Cost is estimated to be around INR 28.75 Cr in which it is proposed to provide internal plumbing for house service connection (81,982 in nos.) in the city in two packages for optimum utilization of water supply schemes under smart cities mission for two packages at a cost of INR 14.50 Cr and INR 14.25 Cr.

Testimonial

After the installation of new internal plumbing, we have cleaner water and a continuous supply of water as compared to before

After the change of pipes which were more than 50 years old now, we have better quality of water and it is also rust free which was a major problem before.

As an ICE supplier I needed clean water for a better quality of ice, now I can produce that required quality of ice thanks to the new internal plumbing system

I was suffering from frequent diarrhea because of quality of water but now it is much better and my health has also improved

As a water treatment plant operator now the capacity of water supply has increased and also we can provide cleaner water to the population of the city and extended corporation.

உள் குழாய்கள்

தற்போது திருப்பூர் மாநகராட்சிக்கு 3 வினியோக திட்டங்களின் கீழ், திட்டம் 1&2 மூலம் பவானி நதி மூலமும், திட்டம் 3 மூலம் காவிரி ஆற்றில் இருந்தும் தண்ணீர் பெறப்பெற்று வருகிறது.

திட்டம் 1 1965 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது மற்றும் திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமானது. திருப்பூர் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. திட்டம் 2 1993 இல் இயக்கப்பட்டது மற்றும் TWAD வாரியத்தால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. திட்டம் 3 2005 இல் தொடங்கப்பட்டது மற்றும் NTADCL க்கு சொந்தமானது. NTADCL ஆல் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

தற்போதுள்ள விநியோக முறையானது 6,39,000 மக்கள்தொகைக்கு 90 LPCD க்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டம் ஒன்றின் குழாய்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. திட்டம் இரண்டின் குழாய்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. விரிவாக்கப்பட்ட மாநகராட்சி பகுதியிலும் முறையான விநியோக முறை தற்போது இல்லை. எனவே இத்திட்டங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி விரிவாக்கப்பட்ட மாநகராட்சியின் மக்கள்தொகை 8.78 லட்சம் மற்றும் 2020, 2035 மற்றும் 2050 ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட மக்கள்தொகை முறையே 10.80 லட்சம், 14.80 லட்சம், மற்றும் 19.50 லட்சம் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் CPHEO விதிமுறைகளின்படி LPCD விகிதம் 135 LPCD ஆகும். இடைநிலை மற்றும் இறுதி நிலைகளுக்கு 226.20 MLD மற்றும் 297.4 MLD என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியில் திட்டமிடப்பட்ட நீர் விநியோக முறை இல்லை.

திட்டச் செலவு சுமார் 28.75 கோடி ருபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு தொகுப்புகளுக்கு ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் நீர் வழங்கல் திட்டங்களின் உகந்த பயன்பாட்டிற்காக இரண்டு தொகுப்புகளில் (14.50 கோடி ரூபாய் மற்றும் 14.25 கோடி ரூபாய்) நகரத்தில் வீட்டு சேவை இணைப்புக்கான உள் குழாய்கள் (81,982) வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

1. புதிய உள் குழாய்களை நிறுவிய பிறகு, முன்பு இருந்ததை விட எங்களிடம் சுத்தமான நீர் மற்றும் தொடர்ச்சியான நீர் விநியோகம் உள்ளது

2. தற்போது 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான குழாய்கள் மாற்றப்பட்ட பிறகு, எங்களிடம் நல்ல தரமான தண்ணீர் உள்ளது. மேலும், இது துருப்பிடிக்காதது. முன்பு இது பெரும் பிரச்சனையாக இருந்தது.

3. ஒரு ஐஸ்கட்டி விநியோகஸ்தர் என்ற முறையில் எனக்கு சிறந்த தரமான பனிக்கட்டிக்கு சுத்தமான நீர் தேவைப்பட்டது, இப்போது புதிய உள் குழாய் அமைப்புக்கு நன்றி. தேவையான தரமான ஐஸ்கட்டிகளை என்னால் தயாரிக்க முடியும்.

4.தண்ணீரின் தரம் காரணமாக நான் அடிக்கடி வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டேன். ஆனால் இப்போது தண்ணீரின் தரம் மிகவும் நன்றாக உள்ளது மற்றும் எனது ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது.

5. நீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குனராக இப்போது நீர் விநியோகத்தின் திறன் அதிகரித்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், நகர மற்றும் விரிவாக்கப்பட்ட மாநகராட்சி மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

BACK