AMRUT - NEW WATER SUPPLY SCHEME

New water supply project for Tiruppur Corporation has been implemented under AMRUT 2017-20 programme as per Tamilnadu Govt.G.O. (Ms). No.43 dated 26.03.2020 for an estimated cost of Rs. Rs 1120.57 Crore. The components of the project have been divided into 6 packages as detailed below:

Package 1: Construction of intake well in River Bhavani near Mettupalayam Town, Sump cum pump house, Supply and erection of Vertical Turbine Pumpsets,Laying of raw water transmission main fromMettupalayam to Water Treatment Plantnear Annur.Project Cost Rs.119.94 Crore.

Package 2:Construction of 196 MLD Water Treatment Plant withrelated works near Annur, Project Cost Rs.85.44 Crore.

Package 3: Clear water Gravity Transmission main for a length of 144.208 km from Annur WTP to Tiruppur to feed 70 Nos of Over Head Service Reservoirs (OHT) in TCMC areas.Project Cost Rs.378.70 Crore.

Package 4: Construction of 12 Nos. of OHT in Tiruppur North zone and laying of distribution network for a length of about 612.50 kms including provision for 44,000 HSCs in TCMC areas.Project Cost Rs.194.74 Crore.

Package 5: Construction of 17 Nos. of OHT in Tiruppur south zoneand laying of distribution network for a length of about 547.425 kms including provision for 27,000 HSCs in TCMC areas.Project Cost Rs.207.15 Crore.

Package 6: Transforming the existing intermittent water supply to continuous 24 x 7 water supply distribution system for the water zone 30 & 50. Laying of Distribution network under DMA technology for a length of 60.988 kms including provision for 8400 HSCs and SCADA system.Project Cost Rs.41.00Crore.

Out of the above, package 1,2& 3 are completed 100 % and 50 to 60 million litre of water is being supplied daily to this Tiruppur Corporation.In this connection, the frequency of water distribution is reduced from 7 to 10 days to 3 to 5 daysinTiruppur city areas.Out of 29 OHTs,22 OHTsare fully completedunder package 4 & 5. The construction works of balance 7 nos of OHTs are in various stages. In distribution pipe line network out of 1159.929 km about 1074.153 km of pipe line were completed. It is planned to complete the work in speedy manner and is in progressive nature. After the implementation of this project the water supply could be effected once in two daysin Tiruppur city.

புதிய குடிநீர் திட்டம்

திருப்பூர் மாநகராட்சி 13.99 இலட்சம் மக்கள் தொகையுடன் 60 வார்டுகளைக் கொண்டுள்ளது. மொத்த பரப்பளவு 159.35 சதுர கிமீ ஆகும். மாநகர மக்களுக்கு தினசரி தேவைப்படும் குடிநீர் அளவு 189 மில்லியன் லிட்டராகும். ஆனால் தற்சமயம் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் தினசரி சராசரியாக 15.00 மில்லியன் லிட்டர், மற்றும் மூன்றாவது குடிநீர் திட்டத்தின மூலம் 103.00 மில்லியன் லிட்டரும் ஆக மொத்தம் 118 மில்லியன லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

இதனால் மாநகராட்சி மற்றும் அதன் உடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்ய இயலவில்லை. இதனை சரி செய்ய அம்ரூத் 2017-20 திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் திட்டப்பணிகள் ரூ.1120.57 கோடி மதிப்பீட்டில் 6 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ரூ.119.94 கோடி மதிப்பீட்டில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் சுத்திகரிக்கப்படாத நீர் எடுக்கும் கிணறு, பம்பு ஹவுஸ், பம்புசெட் மற்றும் மோட்டார் அமைத்தல் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் எடுத்து செல்லும் குழாய் 19.83 கி.மீ நீளத்திற்கு அமைத்து பணிகள் முடிவுற்றுள்ளது.

ரூ.85.44 கோடி மதிப்பீட்டில் அன்னூர் பகுதியில் 196 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது.

ரூ.378.70 கோடி மதிப்பீட்டில் அன்னூர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து திருப்பூரில் அமைந்துள்ள 70 மேல்நிலை தொட்டிகளுக்கு புவிஈர்ப்பு விசை மூலம் குடிநீர் மேலேற்றும் விதமாக 144.208 கி.மீ நீளத்திற்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது.

ரூ.194.74 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் மாநகரின் வடக்கு பகுதிகளில் 12 எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், 612.504கிமீ நீளத்திற்கு குடிநீர் விநியோக குழாய் பதித்தல் மற்றும் 44000 எண்ணிக்கைகள் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 92 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது.

207.15 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் மாநகரின் தெற்கு பகுதிகளில் 17 எண்ணிக்கையிலான மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், 547.425 கிமீ நீளத்திற்கு குடிநீர் விநியோக குழாய் பதித்தல் மற்றும் 27000 எண்ணிக்கைகள் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு 91 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது.

ரூ. 41.00 கோடிமதிப்பீட்டில் குடிநீர் பகிர்மான மண்டலம் 30 மற்றும் 50 பகுதிகளில் 24x7 முறையில் குடிநீர் விநியோகம் செய்ய DMA தொழில் நுட்பத்துடன் 60.988 கி.மீ நீளத்திற்கு பகிர்மானக் குழாய்கள் பதித்தல். 8400 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது.

இவற்றில் சிப்பம் 1,2 மற்றும் 3-ன் பணிகள் முழுவதுமாக 100% முடிக்கப்பட்டு சராசரியாக 50 முதல் 60 எம்.எல்.டி குடிநீர் தினமும் பெறப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் திருப்பூர் மாநகரில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர் தற்போது 3 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு திருப்பூர் மாநகர பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும்.

இதன் மூலம் மாநகரின் 60 வார்டுகளிலும் உள்ள 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கும் தேவையான அளவிற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் முழுமையாக வழங்கப்படும். மாநகரில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இதனால் மிகுந்த பலன் பெறுவார்கள்.