ICCC (Integrated Command and Control Centre)

The ICCC project is an integral part of the Smart Cities Mission in Tiruppur. The Integrated Command and Control Centre has been developed as a fully equipped and facilitated centre in the Tiruppur Corporation building in the heart of the city. The ICCC functions 24/7 to help not only citizens but also authorities monitor and manage the everyday operations of the city. The 24-hour support system will provide real-time smart solutions to enable quicker services.

Tiruppur is a densely populated city with myriad factories and employment opportunities. As a result, the migrant population is increasing year after year, making the city more vibrant and happening. So, there is a need for an integrated command and control centre to integrate the essential government services and serve as a single point control centre for all the amenities for the public. An ICCC will surely streamline various activities in the city, contribute towards the smooth functioning of various services, and safeguard the wellbeing of the general public.

Under the Smart City Initiative, the Tiruppur Smart City Limited proposed the development of an ICCC for the city of Tiruppur. The proposal was accepted, a plan was devised and the ICCC came into existence within a short period of time. Currently, the city corporation is using the ICCC for various services like water supply, complaint management, solid waste management, smart parking, surveillance, emergency response mechanisms, and real-time tracking of the different public services.

On the whole, the ICCC acts as the nerve centre for operations management in Tiruppur, handling day-to-day exception handling and disaster management. It provides the city municipal corporation with smart solutions to help manage safety and surveillance in the city.

The ICCC was established in the ground floor of the City Corporation Building, covering a carpet area of 2469 sq. ft. The control centre is facilitated with a reception, video room, war room, auxiliary support room, server room, and EB/UPS room.

The ICCC was established in the ground floor of the City Corporation Building, covering a carpet area of 2469 sq. ft. The control centre is facilitated with a reception, video room, war room, auxiliary support room, server room, and EB/UPS room.

  • Smart poles to provide street lighting, wi-fi hotspot services, mobile broadband infrastructure, and surveillance cameras
  • Smart street lights
  • The emergency box or panic button
  • Smart environment sensors that collect data about temperature, rains, flood levels, and pollution levels in the city on a daily basis
  • Rain gauge
  • City Surveillance System
  • Video management systems (VMDs) at identified strategic locations
  • Mobile vans and drones (if needed) used as and when the situation demands it to capture the real-time video feed of an incident

The project started on May 3, 2021, and was successfully completed on June 27, 2021.

Testimonial

(Stakeholder): The establishment of the ICCC is a big leap in technology with regards to the surveillance and management of various public services in the city. I’m truly proud of this smart city initiative. I can see how the different services are being controlled and streamlined effectively by the ICCC.

I’ve heard that ICCC is a new addition to the city corporation’s services. It’s really exciting to know that Tiruppur has been elevated to the level of enjoying such sophisticated projects.

I have only watched in movies how people sitting in a room in front of a computer control what’s happening on the streets. It’s really interesting and I welcome more such projects.

I felt excited when I came to know about this project. I hope the public will largely benefit from the services offered by the ICCC.

The ICCC works 24 hours a day and 7 days a week, which is a great initiative by the government. It makes me feel more safe and secure when I’m on the road. It makes me feel that someone is observing what’s happening out there, and this will certainly make a difference. In fact, the crime rates will come down drastically, I feel.

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC)

ICCC திட்டம் திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி மிஷனின் ஒரு முக்கியமான திட்டமாகும். ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், நகரின் மையப்பகுதியில் உள்ள திருப்பூர் மாநகராட்சி கட்டிடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. ICCC ஆனது குடிமக்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் நகரின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து நிர்வகிக்க உதவுவதற்காக 24/7 செயல்படுகிறது. இந்த 24 மணிநேர ஆதரவு அமைப்பு விரைவான சேவைகளை இயக்க நிகழ்நேர சிறந்த தீர்வுகளை வழங்கும்.

எண்ணற்ற தொழிற்சாலைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் கொண்ட மக்கள் அடர்த்தியான நகரம் திருப்பூர். இதன் விளைவாக, புலம்பெயர்ந்த மக்கள்தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இது நகரத்தை மிகவும் பரபரப்பாக இயங்க செய்கிறது. எனவே, அத்தியாவசிய அரசு சேவைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களுக்கான அனைத்து வசதிகளுக்கும் ஒரே புள்ளி கட்டுப்பாட்டு மையமாக செயல்பட, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் தேவைப்பட்டது.

ஒரு ICCC நிச்சயமாக நகரத்தில் பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும். பல்வேறு சேவைகளின் சீரான செயல்பாட்டிற்கு பங்களிக்கும். மேலும், பொது மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும்.

ஸ்மார்ட் சிட்டி முன்முயற்சியின் கீழ், திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் திருப்பூர் நகரத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்க முன்மொழிந்தது. முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒரு திட்டம் வகுக்கப்பட்டு, ICCC குறுகிய காலத்திற்குள் நடைமுறைக்கு வந்தது.

தற்போது, திருப்பூர் மாநகராட்சி தண்ணீர் விநியோகம், புகார் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, ஸ்மார்ட் பார்க்கிங், கண்காணிப்பு, அவசரகால பதிலளிப்பு வழிமுறைகள் மற்றும் பல்வேறு பொது சேவைகளின் நிகழ்நேர கண்காணிப்பு போன்ற பல்வேறு சேவைகளுக்கு இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பயன்படுத்துகிறது.

மொத்தத்தில், ICCC ஆனது திருப்பூரில் செயல்பாட்டு மேலாண்மைக்கான நரம்பு மையமாக செயல்படுகிறது. பேரிடர் மேலாண்மையையும் கையாளுகிறது. மேலும், நகரத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை நிர்வகிக்க உதவும் ஸ்மார்ட் தீர்வுகளை நகர முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு வழங்குகிறது.

ICCC ஆனது திருப்பூர் மாநகராட்சி கட்டிடத்தின் தரை தளத்தில் 2469 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. கட்டுப்பாட்டு மையம் வரவேற்பு அறை, காணொளி அறை, போர் அறை (war room), உதவி மற்றும் ஆதரவு அறை, சர்வர் அறை மற்றும் EB/UPS ஆகியவற்றுடன் வசதியாக உள்ளது.

ICCC ஆனது திறமையான நிகழ்வு மேலாண்மை அமைப்பு, சம்பவ மேலாண்மை அமைப்பு, எச்சரிக்கை அமைப்பு, வானொலி மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள், சமூக ஊடக அமைப்பு, காணொளி காட்சி அமைப்பு, விளக்கமளிக்கும் தொகுதி மற்றும் நடமாடும் இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், ICCC கீழ்கண்டவற்றுடன் இணைக்கப்பட்டு, அவற்றை கண்காணித்து, நிர்வகிக்கிறது:

  • i) தெரு விளக்குகள், Wi-Fi ஹாட்ஸ்பாட் சேவைகள், கைபேசியின் அதிவேக இணையதள உள்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு கேராக்கள்
  • ஸ்மார்ட் தெரு விளக்குகள்
  • அவசரகால பெட்டி (emergency box) அல்லது எச்சரிக்கை சாதனம்
  • நகரின் வெப்பநிலை, மழை, வெள்ள அளவு மற்றும் மாசு அளவு பற்றிய தரவுகளை தினசரி அடிப்படையில் சேகரிக்கும் ஸ்மார்ட் சுற்றுச்சூழல் உணரிகள்
  • மழை மானி (rain gauge)
  • நகர கண்காணிப்பு அமைப்பு
  • அடையாளம் காணப்பட்ட முக்கிய இடங்களில் காணொளி மேலாண்மை அமைப்புகள் (VMDs)
  • மொபைல் வேன்கள் மற்றும் ட்ரோன்கள் (தேவைப்பட்டால்) ஒரு சம்பவத்தின் நிகழ்நேர காணொளி ஊட்டத்தைப் பிடிக்க சூழ்நிலை கோரும் போது பயன்படுத்தப்படுகின்றன

இந்தத் திட்டம் மே 3, 2021 அன்று தொடங்கப்பட்டு, ஜூன் 27, 2021 அன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

சான்றுகள்

1. (பங்குதாரர்): ICCC ஸ்தாபனமானது, நகரின் பல்வேறு பொதுச் சேவைகளின் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய பாய்ச்சலாகும். இந்த ஸ்மார்ட் சிட்டி முயற்சியால் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த மையத்தால் பல்வேறு சேவைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் திறம்பட நெறிப்படுத்தப்படுகின்றன என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

2. ICCC என்பது நகர கழகத்தின் சேவைகளில் ஒரு புதிய கூடுதலாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தகைய அதிநவீன திட்டங்களை அனுபவிக்கும் அளவிற்கு திருப்பூர் உயர்ந்துள்ளது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

3. கணினியின் முன் அறையில் அமர்ந்திருப்பவர்கள் தெருக்களில் நடப்பதை எப்படிக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை நான் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இது மிகவும் சுவாரஸ்யமானது. மேலும், இதுபோன்ற திட்டங்களை நான் வரவேற்கிறேன்.

4. இந்தத் திட்டத்தைப் பற்றி அறிந்தபோது நான் உற்சாகமாக உணர்ந்தேன். ICCC வழங்கும் சேவைகளால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என நம்புகிறேன்.

5. ICCC ஆனது 24 மணிநேரமும் வாரத்தில் 7 நாட்களும் வேலை செய்கிறது. இது அரசாங்கத்தின் சிறந்த முயற்சியாகும். நான் சாலையில் செல்லும்போது அது என்னை மிகவும் பாதுகாப்பாக உணர வைக்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதை யாரோ கவனித்துக் கொண்டிருப்பதை இது எனக்கு உணர்த்துகிறது. இது நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். உண்மையில், குற்ற விகிதங்கள் வெகுவாகக் குறையும் என்பதை நான் உணர்கிறேன்.

BACK