Green Space Development (Parks)

The Green Space Development is an important project proposed and developed by Tiruppur Smart City Limited (TSCL), under the Smart City Mission. Green Space Development involves identifying, preserving, and developing parks and other green areas in the heartland of the city.

Tiruppur is an industrial city with a large number of industries and a high population density. Industries contribute to high levels of pollution, and excessive human activity causes the urban heat island effect (the heat trapped in built-up areas). Green spaces in the city can lessen the effects of pollution and reduce the urban heat island effect.

In order to increase the green spaces in the city, TSCL proposed the Green Space Development project under the Smart City Mission. Four parks/green areas were chosen to be developed under this project. The parks include: RayapuramRoundana Park (26 cents), Rayapuram Park behind Krishnan Kovil (92 cents), Pudhu Nagar Park (11 cents), and JG Nagar Park (62 cents).

These parks were developed to provide a lush green cover with native plants and trees, recreational facilities, a gym, and sports facilities. While the increased green cover will reduce the city’s carbon footprint and promote eco-balance, the recreational and sports facilities are bound to enhance the quality of life of the citizens.

The four parks that were developed as part of the Green Space Development project feature water fountains, open seating areas, planting of shrubs and trees (mostly native varieties), and well-built pathways. The Green Space Development project offers a range of environmental, social, health, and economic benefits.

A total of Rs. 3.88 crore was spent on the project. The work is complete, a trial run is currently in progress, and the parks will soon be open for public use.

பசுமை வெளி மேம்பாடு

பசுமை வெளி மேம்பாடு என்பது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் (டிஎஸ்சிஎல்) மூலம் முன்மொழியப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும். பசுமை வெளி மேம்பாடு என்பது நகரின் மையப்பகுதியில் உள்ள பூங்காக்கள் மற்றும் பிற பசுமையான பகுதிகளை அடையாளம் கண்டு, பாதுகாத்து, மேம்படுத்துவதே ஆகும்.

திருப்பூர் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் மற்றும் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட தொழில் நகரமாகும். தொழில்கள் அதிக அளவு மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன. மேலும் அதிகப்படியான மனித செயல்பாடு நகர்ப்புற வெப்ப தீவு விளைவை (urban heat island effect) ஏற்படுத்துகிறது (கட்டமைக்கப்பட்ட பகுதிகளில் வெப்பம் சிக்கிக்கொள்வது). நகரத்தில் பசுமையான இடங்கள் அதிகமாக இருப்பின் மாசுபாட்டின் விளைவுகளையும் நகர்ப்புற வெப்ப தீவு விளைவையும் குறைக்கலாம்.

நகரத்தில் பசுமையான இடங்களை அதிகரிப்பதற்காக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பசுமை வெளி மேம்பாட்டு திட்டத்தை TSCL முன்மொழிந்தது. இத்திட்டத்தின் கீழ் நான்கு பூங்காக்கள்/பசுமைப்பகுதிகள் மேம்படுத்த தேர்வு செய்யப்பட்டன. பூங்காக்கள்: ராயபுரம் ரவுண்டானா பூங்கா (26 சென்ட்), கிருஷ்ணன் கோவிலுக்கு பின்புறம் உள்ள ராயபுரம் பூங்கா (92 சென்ட்), புது நகர் பூங்கா (11 சென்ட்), மற்றும் ஜே.ஜி.நகர் பூங்கா (62 சென்ட்).

இந்த பூங்காக்கள், பூர்வீக தாவரங்கள் மற்றும் மரங்கள், பொழுதுபோக்கு வசதிகள், உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு வசதிகளுடன் கூடிய பசுமையான உறையை வழங்குவதற்காக உருவாக்கப்படுகின்றன. இந்த பசுமை வெளி நகரின் கார்பன் தடத்தைக் குறைத்து சுற்றுச்சூழல் சமநிலையையும் ஊக்குவிக்கும். அதே வேளையில், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

பசுமை வெளி மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட நான்கு பூங்காக்களில் நீரூற்றுகள், திறந்த இருக்கை பகுதிகள், செடிகள் மற்றும் மரங்கள் (பெரும்பாலும் பூர்வீக வகைகள்) மற்றும் நன்கு கட்டப்பட்ட பாதைகள் இடம்பெரும். பசுமை வெளி மேம்பாட்டுத் திட்டம் சுற்றுச்சூழல், சமூக, சுகாதாரம் மற்றும் பொருளாதார நன்மைகளை வழங்குமாறு உருவாக்கப்படுகிறது.

மொத்தம் இத்திட்டத்திற்கு 3.88 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பணிகள் நிறைவடைந்து, தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

BACK