Description

The Solar Power Plant of capacity 4.80 MWp was proposed by the Tiruppur City Municipal Corporation under the Smart City Mission. The solar power plant is set up in Iduvai, Tiruppur. Together with the other Solar Power Plant of 2.00 MWp capacity, this plant will generate 11200 megawatt hours of power per annum.

Tiruppur is an important industrial city and one of the fastest growing cities in the country. There is a wide range of small-scale and large-scale industries in the city. Hence, the power demand is really high. In addition, the water supply improvement scheme and the UGS scheme that were proposed under the smart city mission have increased the requirement for power in the city.

With power consumption increasing exponentially and the need for additional power resources becoming essential, a well-facilitated solar power plant is the need of the hour to fulfil the growing power requirements in the city. Realizing the need, the Tiruppur City Corporation proposed the Solar Power Plant project of capacity 4.80 MWp when the centre included Tiruppur as one of the smart cities in the country.

The solar power plant was successfully set up within the stipulated time to power the different industrial establishments in the city. A land of 23.38 acres that belonged to the Tiruppur revenue district was chosen in Iduvai, a small village situated 12 km away from the city centre. The solar power plant is well designed and built with all the basic facilities and amenities, including compound walls on all sides.

The plant is facilitated to generate 7.990 Mwh per month, eventually reducing the power charges from HT consumption. An amount of Rs. 27.16 crore has been invested in the Solar Power Plant 4.80 MWp project.

Testimonial

The new solar power plant at Iduvai is a great initiative by the Tiruppur Corporation. As a common man, I believe that there’ll be fewer power outages in the city in the future.

I understand that solar energy is an economical option. Moreover, I understand it is environment-friendly and there won’t be much depletion of water resources in the city. Overall, it is a welcome project.

Many small companies in Tiruppur will be highly benefitted by the new solar power plant in Iduvai. Also, it’s cheaper than the regular power source and it requires little maintenance.

As a nature lover, I’m glad about the new solar power plant project in Tiruppur. There will not be any fossil fuel emissions, which is the leading cause of global warming, and solar energy is the cleanest form of energy available. I’m excited about this environment-friendly project.

(Stakeholder): There are many benefits of this solar power plant. Besides being eco-friendly, it is safe and reduces electricity bills. It is a source of renewable energy, there will be zero carbon emission, and the maintenance cost is really low. All of these factors make this a great initiative by the government. People from all walks of life will profit from this plant.

சூரிய மின் உற்பத்தி நிலையம் 4.80 மெகாவாட்

ஸ்மார்ட் சிட்டி மிஷனின் கீழ் திருப்பூர் முனிசிபல் சிட்டி கார்ப்பரேஷனால் 4.80 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் முன்மொழியப்பட்டது. சூரிய மின் உற்பத்தி நிலையம் திருப்பூரின் இடுவாய் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. 2.00 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு சூரிய மின் நிலையத்துடன் சேர்ந்து, இந்த ஆலை ஆண்டுக்கு 11200 மெகாவாட் மணிநேர சக்தியை உருவாக்கும்.

திருப்பூர் ஒரு முக்கியமான தொழில்துறை நகரம் மற்றும் நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். நகரத்தில் சிறிய அளவிலான மற்றும் பெரிய அளவிலான தொழில்கள் உள்ளன. எனவே, மின் தேவை உண்மையில் அதிகமாக உள்ளது. கூடுதலாக, ஸ்மார்ட் சிட்டி மிஷனின் கீழ் முன்மொழியப்பட்ட நீர் வழங்கல் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் UGS திட்டம் ஆகியவை நகரத்தில் மின்சக்திக்கான தேவையை அதிகரித்துள்ளன.

மின் நுகர்வு அதிவேகமாக அதிகரித்து வருவதோடு, கூடுதல் மின் வளங்களின் தேவை அவசியமாகவும் இருப்பதால், நகரத்தில் வளர்ந்து வரும் மின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஒரு சூரிய மின் உற்பத்தி நிலையம் அவசியமாகிறது. தேவையை உணர்ந்து, திருப்பூர் சிட்டி கார்ப்பரேஷன் 4.80 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலைய திட்டத்தை முன்மொழிந்தது.

நகரத்தின் வெவ்வேறு தொழில்துறை நிறுவனங்களுக்கு சக்தி அளிக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் குறுகிய காலகட்டத்தில் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23.38 ஏக்கர் நிலப்பரப்பின் நிலம் இடுவாயில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நகர மையத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். சூரிய மின் உற்பத்தி நிலையம் நன்கு வடிவமைக்கப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் அனைத்து பக்கங்களிலும் வெளிச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் மாதத்திற்கு 7.990 மெகாவாட் தயாரிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இறுதியில் HT நுகர்வு மூலம் மின் கட்டணங்களை குறைக்கிறது. இந்த சூரிய மின் நிலையம் 4.80 மெகாவாட் திட்டத்தில் ரூ. 27.16 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சான்றுகள்

இடுவாயில் உள்ள புதிய சூரிய மின் உற்பத்தி நிலையம் திருப்பூர் கார்ப்பரேஷனின் சிறந்த முயற்சியாகும். ஒரு சராசரி குடிமகனாக, எதிர்காலத்தில் நகரத்தில் குறைவான மின் தடைகள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

சூரிய ஆற்றல் ஒரு சிக்கனமான வழி என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மேலும், இது சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கும் என்று நான் புரிந்துகொள்கிறேன். இதனால் நகரத்தில் உள்ள நீர்நிலைகளை ஓரளவுக்கு காக்க முடியும். ஆகமொத்தத்தில், இது ஒரு வரவேற்கத்தக்க திட்டமாகும்.

திருப்பூரில் உள்ள பல சிறிய நிறுவனங்கள் இடுவாயில் உள்ள புதிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தால் மிகவும் பயனடையும். மேலும், இது வழக்கமான சக்தி மூலத்தை விட மலிவானது. மேலும், இதற்க்கான பராமரிப்பு செலவும் குறைவு.

ஒரு இயற்கை ஆர்வலராக, திருப்பூரில் உள்ள புதிய சூரிய மின் உற்பத்தி நிலையம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். எந்தவொரு புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகளும் இருக்காது. இது புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமாகும். மேலும் சூரிய ஆற்றல் என்பது கிடைக்கக்கூடிய ஆற்றலின் தூய்மையான வடிவமாகும். இந்த சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கும் திட்டம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

(பங்குதாரர்): இந்த சூரிய மின் நிலையத்தின் மூலமாக பல நன்மைகள் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்படைவதோடு, மின்சார கட்டணமும் குறைகிறது. இதனால் கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக இருக்கும். மற்றும் பராமரிப்பு செலவு உண்மையில் குறைவாக இருக்கும். இந்த காரணிகள் அனைத்தும் இதை அரசாங்கத்தின் ஒரு சிறந்த முயற்சியாக மாற்றுகிறது. அனைத்து தரப்பு மக்களும் இந்த மின்நிலையத்தால் பயன்பெறுவார்கள்.

BACK