Description

The construction of smart roads is an integral part of the Smart Cities Mission, the dream project of our government. The main objective of the project is to enhance the street infrastructure of Tiruppur by laying smart roads that feature excellent pedestrian safety and seamless traffic.

Before the Smart Roads project took shape, there were a lot of issues with the city’s street infrastructure. Tiruppur, being a densely populated city, has roads that are always buzzing with heavy traffic. There weren’t a lot of roads with a broad vision. Most of the roads were narrow and overcrowded. They had numerous bumps and potholes, leading to frequent accidents. Such roads made road commuting difficult for all road users, such as motorists, cyclists, and pedestrians.

The need for well-laid roads was always on the minds of the authorities and the public. When Tiruppur was announced as one of the smart cities of India, the city municipal corporation proposed the smart road project to create safer, smoother, and greener roads in the city. The project was approved, and the TSCL came up with an extensive, all-inclusive Smart Road project proposal that fulfilled the transport and road needs of everyone—people of all age groups as well as those with physical challenges.

The standard best practices were followed to build well designed and equipped smart roads, streets, and crossroads in a number of places in Tiruppur. Both BT (bitumen) and CC (cement concrete) roads are being laid, based on the requirements of the specific locality. A total of 12.342 km has been planned to be covered under Smart Road Phase 2. Smart roads are being constructed by aligning with other public service departments, including drinking water and sewage systems, BSNL, TNEB, and storm water management.

Besides the construction of quality roads, there are other interesting features being installed wherever applicable as part of Smart Road Phase 2. These include: pedestrian pathways, pedestrian crossings, table top crossings, GI fixed bollards, seating made of rubble stone, planter boxes, tree gratings, street lights, water dispensers, on-street parking for two-wheelers and four-wheelers, feeder pillars, stalls for street vendors, sign boards (regulatory, informative, and warning), landscaping, solar powered charging points, LED display panels, tactile flooring, separate cycle tracks, information kiosks, smart poles, litter bins, smart interactive panels, and vertical gardens.

The Smart Roads Phase 2 project is nearing completion, and the public have already started enjoying the benefits of the smart roads that have been completed. The total investment made in the project is Rs. 71.79 crore.

ஸ்மார்ட் சாலை கட்டம் 2

ஸ்மார்ட் சாலைகளை நிர்மாணிப்பது ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷனின் முக்கிய அங்கமாகும். இது நம் அரசாங்கத்தின் கனவு திட்டமாகும். சிறந்த பாதசாரி பாதுகாப்பு மற்றும் தடையற்ற போக்குவரத்து ஆகியவற்றைக் கொண்ட ஸ்மார்ட் சாலைகளை அமைப்பதன் மூலம் திருப்பூரின் தெரு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

ஸ்மார்ட் சாலை திட்டம் வடிவம் பெறுவதற்கு முன்பு, நகரத்தின் தெரு உள்கட்டமைப்பில் நிறைய சிக்கல்கள் இருந்தன. திருப்பூர், அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரமாக இருப்பதால், அதிக போக்குவரத்துடன் எப்போதும் சாலைகள் சலசலப்புடன் காணப்பட்டன. மேலும், நிறைய சாலைகள் பரந்த பார்வை (broad vision) இல்லாமல் இருந்தது. பெரும்பாலான சாலைகள் குறுகியதாகவும் நெரிசல் அதிகமானதாகவும் இருந்தன. அவற்றில் ஏராளமான மேடு பள்ளங்கள் மற்றும் குழிகள் இருந்தது. இது அடிக்கடி விபத்துக்களுக்கு வழிவகுத்தது. இத்தகைய சாலைகள் சாலை பயணத்தை வாகன ஓட்டிகள், சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் போன்ற அனைத்து சாலை பயனர்களுக்கும் கடினமாக்கியது.

அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மனதில் நன்கு நிறுவப்பட்ட சாலைகளின் தேவை எப்போதும் இருந்தது. இந்தியாவின் ஸ்மார்ட் நகரங்களில் ஒன்றாக திருப்பூர் அறிவிக்கப்பட்டபோது, திருப்பூர் மாநகராட்சி ஆனது ஸ்மார்ட் சாலை திட்டத்தை நகரத்தில் பாதுகாப்பான, மென்மையான மற்றும் பசுமையான சாலைகளை உருவாக்க முன்மொழிந்தது. இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

மேலும், TSCL ஒரு விரிவான, அனைத்தையும் உள்ளடக்கிய ஸ்மார்ட் சாலை திட்டத்தை கொண்டு வந்தது. இது அனைவரின் போக்குவரத்து மற்றும் சாலைத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக வடிவமைக்கபட்டது. எல்லா வயதினரும் உடல் ரீதியான சவால்களை கொண்டவர்களும் இதனால் பயன்பெறுவார்கள்.

திருப்பூரில் பல இடங்களில் நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் சாலைகள், வீதிகள் மற்றும் குறுக்கு வழிகளை உருவாக்க நிலையான சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. குறிப்பிட்ட வட்டாரத்தின் தேவைகளின் அடிப்படையில் BT (பிட்டுமின்) மற்றும் CC (சிமென்ட் கான்கிரீட்) சாலைகள் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் சாலை கட்டம் 2 இன் கீழ் மொத்தம் 12.342 கி.மீ.க்கு திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள், BSNL, TNEB மற்றும் புயல் நீர் மேலாண்மை உள்ளிட்ட பிற பொது சேவைத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு ஸ்மார்ட் சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

தரமான சாலைகளின் கட்டுமானத்தைத் தவிர, ஸ்மார்ட் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில இடங்களில் பிற சுவாரஸ்யமான அம்சங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: பாதசாரி பாதைகள், பாதசாரி குறுக்குவெட்டுகள், GI பொல்லார்டுகள் (bollards), கல்லால் செய்யப்பட்ட இருக்கைகள், செடி தொட்டிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதி, இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த போதுமான இடங்கள், தூண்கள், சாலையோர விற்பனையாளர்களுக்கான கடைகள், குறியீடு பலகைகள் (ஒழுங்குமுறை, தகவல் மற்றும் எச்சரிக்கை), இயற்கை அழகியல், சூரிய சக்தியால் இயங்கும் சார்ஜிங் புள்ளிகள், LED காட்சி பேனல்கள், தொட்டுணரக்கூடிய தளம் (tactile flooring), தனி மிதிவண்டி தடங்கள், தகவல் கியோஸ்க்கள் (kiosks), ஸ்மார்ட் கம்பங்கள், குப்பைத்தொட்டிகள், ஸ்மார்ட் ஊடாடும் பேனல்கள் மற்றும் செங்குத்து தோட்டங்கள் (vertical gardens).

ஸ்மார்ட் சாலை கட்டம் 2 திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மேலும், பொதுமக்கள் ஏற்கனவே முடிந்துவிட்ட ஸ்மார்ட் சாலைகளின் நன்மைகளை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தில் செய்யப்படும் மொத்த முதலீடு ரூ. 71.79 கோடி.

BACK