Description

Installation of road signs on all important roadways in Tirupur is one of the projects under the Smart City Mission.

Tiruppur is a densely populated and fast-growing city that is home to a vast migrant population. Its vehicular density is high and exponentially growing. Currently, there are some road signage posts installed by the Tiruppur Municipal Corporation, NHAI, and State Highways Department as part of their routine works. These road signs provide just the normal distance notifications, which is considered inadequate information.

Erection of road signage is important to regulate the traffic as well as optimize the service to the traffic. Eventually, the Signage project was included among the smart city initiatives in Tiruppur, and the work started in 2020.

The main objectives of signage are to guide citizens, visitors, and tourists to their destinations, regulate traffic and ensure road safety, and enhance the quality of tourist attractions. In addition, the signage work will add to the value of the city’s public information system.

The signage project proposed by the City Corporation comprises two broad categories of road signs. Out of these, one category of signs will be installed on the city’s main roads to guide tourists to their destinations, and provide information on the facilities and attractions available there. The other category of signage with prime information will be placed near important destinations and on internal roads.

The estimated cost of the road signage project at different locations in Tiruppur is Rs. 6.33 crores. 75% of the main junction area boards have been installed. Currently, single and double arrow signage installation work is in progress.

அடையாள பலகைகள்

திருப்பூரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் சாலை அடையாள பலகைகள் நிறுவுவது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்களில் ஒன்றாகும்.

திருப்பூர் மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது. இது பரந்த புலம்பெயர்ந்த மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. அதன் வாகன அடர்த்தி அதிகமாக உள்ளது மற்றும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது, திருப்பூர் மாநகராட்சி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை ஆகியவை, தங்கள் வழக்கமான பணிகளின் ஒரு பகுதியாக, சில சாலை அடையாளக் கம்பங்கள் கம்பங்களை நிறுவியுள்ளன. இந்த சாலை அடையாளங்கள் சாதாரண தொலைவு அறிவிப்புகளை மட்டுமே வழங்குகின்றன. இவற்றில் போதிய தகவல் இல்லை என்று கருதப்படுகிறது.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், போக்குவரத்திற்கான சேவையை மேம்படுத்துவதற்கும் சாலைப் பலகைகளை அமைப்பது முக்கியம். இதன் நோக்கமாக, அடையாள பலகைகள் திட்டம் திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி முயற்சிகளில் சேர்க்கப்பட்டது. மேலும் பணிகள் 2020 இல் தொடங்கப்பட்டன.

குடிமக்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அவர்கள் செல்லும் இடங்களுக்கு வழிகாட்டுதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் சுற்றுலாத் தலங்களின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடையாள பலகைகளின் முக்கிய நோக்கங்களாகும். கூடுதலாக, இந்த திட்டம் நகரின் பொது தகவல் அமைப்பின் மதிப்பை அதிகரிக்கும்.

மாநகராட்சியால் முன்மொழியப்பட்ட அடையாள பலகை திட்டம் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டது. இவற்றில், நகரின் முக்கிய சாலைகளில் சுற்றுலாப் பயணிகளை அவர்களின் இடங்களுக்கு வழிகாட்டவும், அங்குள்ள வசதிகள் மற்றும் இடங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் ஒரு வகைப் பலகைகள் நிறுவப்படும். முக்கியத் தகவல்களுடன் கூடிய மற்ற வகைப் பலகைகள் முக்கியமான இடங்களுக்கு அருகிலும் உள்சாலைகளிலும் வைக்கப்படும்.

திருப்பூரில் பல்வேறு இடங்களில் நிறுவப்படும் சாலைப் பலகை திட்டத்தின் மதிப்பீடு ரூ. 6.33 கோடி. 75% பிரதான சந்திப்பு பகுதி பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது ஒற்றை அம்புக்குறி மற்றும் இரட்டை அம்புக்குறி பதிக்கும் பணி நடந்து வருகிறது.

BACK