Convention Centre

The Convention Centre project in Tiruppur is part of the Smart City Mission. The project was proposed by TSCL and it is being developed in the ABD area of the city by dismantling the existing Town-Hall structure.

Tiruppur is home to myriad garment manufacturing companies, and so a number of exhibitions and expos are conducted frequently by different associations for marketing and selling their products. Foreign companies showcase their state-of-the-art machineries and other technological advancements in such expos to develop the knitwear industry in the city. Besides, many cultural programmes are conducted by the locals in private open spaces. A well-equipped convention centre will fulfil the requirements of such activities and will be highly useful for businesses and customers alike.

For the above stated reasons, the construction of a convention centre was proposed by the TSCL under the smart city mission. Town-Hall was chosen for developing the convention centre, because it is nestled in the heart of the city, amidst busy commercial outlets. Following detailed surveys and meticulous planning, the old and damaged Town-Hall building is now being developed as a Convention Centre by dismantling and redesigning the layout in order to ease its utility and serve more purposes.

The proposal envisages the development of nearly 8000 sq m that includes a convention centre with meeting rooms of varied sizes, exhibition space, space for public movement, ample parking space, and other support facilities. The centre will feature important amenities such as toilets, food joints, waiting halls, rainwater harvesting, security, and fire safety measures.

The total investment for this project is Rs. 52 crore. The work is currently in progress.

கன்வென்ஷன் சென்டர் (மாநாட்டு மையம்)

கன்வென்ஷன் சென்டர் திட்டம் திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு அங்கமாகும். திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் (TSCL) இந்த திட்டத்தை முன்மொழிந்தது. இந்த மையம் தற்போதுள்ள டவுன் ஹால் கட்டமைப்பை அகற்றி நகரின் ABD பகுதியில் உருவாக்கப்படுகிறது.

திருப்பூர் எண்ணற்ற ஆடை உற்பத்தி நிறுவனங்களின் தாயகமாக உள்ளது, எனவே பல்வேறு அமைப்புகள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் பல கண்காட்சிகளை அடிக்கடி நடத்துகின்றன. நகரத்தில் பின்னலாடைத் தொழிலை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் அதிநவீன இயந்திரங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்களை இதுபோன்ற கண்காட்சிகளில் காட்சிப்படுத்துகின்றன.

இது தவிர, தனியாருக்கு சொந்தமான இடங்களில் (திறந்தவெளிகளில்) உள்ளூர் மக்களால் பல கலாச்சார நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. ஒரு நல்ல வசதியான, அதிநவீன மாநாட்டு மையம் இத்தகைய நடவடிக்கைகளின் தேவைகளை நிச்சயமாக பூர்த்தி செய்யும். மேலும், வணிகங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலே கூறப்பட்ட காரணங்களுக்காக, ஸ்மார்ட் சிட்டி பணியின் கீழ் ஒரு கன்வென்ஷன் சென்டரின் கட்டுமானத்தை TSCL முன்மொழிந்தது. இந்த மையத்தை நிறுவவதற்க்காக டவுன்-ஹால் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் இது நகரின் மையத்தில், பரபரப்பான வணிக விற்பனை நிலையங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

விரிவான ஆய்வுகள் மற்றும் துல்லியமான திட்டமிடலுக்குப் பிறகு, பழைய மற்றும் சேதமடைந்த டவுன்-ஹால் கட்டிடம் அதன் பயன்பாட்டை எளிதாக்குவதற்கும் கூடுதல் நோக்கங்களுக்காகவும் தளவமைப்பை அகற்றி மறுவடிவமைப்பு செய்யப்பட்டு ஒரு மாநாட்டு மையமாக உருவாக்கப்படுகிறது.

ஏறக்குறைய 8000 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு அளவிலான சந்திப்பு அறைகள், கண்காட்சி கூடம், பொதுமக்கள் நடமாடுவதற்கான இடம், போதுமான வாகன நிறுத்துமிடம் மற்றும் பிற முக்கிய வசதிகளுடன் கூடிய மாநாட்டு மையத்தை உள்ளடக்கியதாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கழிப்பறைகள், சிற்றுண்டி சாலை, காத்திருப்பு கூடங்கள், மழைநீர் சேகரிப்பு, பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் போன்ற முக்கிய வசதிகள் இடம்பெறும்.

இந்த திட்டத்திற்கான மொத்த முதலீடு ரூ. 52 கோடி. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

BACK