Description

The upcoming MLCP (Multi-Level Car Parking) at Town Hall (Kumaran Road) in Tiruppur is an important project that has been proposed under the smart city initiative. The project site is located in the heart of the city, and once it is open to the public, it is sure to become a remarkable structure that will ideally fulfil the parking requirements of one of the most commercial and busiest areas of the district.

The Kumaran Road is 0.64 km long and is the prominent shopping area of Tiruppur, with a number of commercial outlets and buzzing traffic throughout the day. However, the current parking situation in this area is pathetic, with two-wheelers and four-wheelers parked at random, causing a slew of problems for both pedestrians and motorists.

Most commercial buildings do not have a dedicated parking lot for their employees and customers, leading to extensive and senseless parking of vehicles on both sides of Kumaran Road. This results in heavy traffic and chaos, affecting the public to a large extent.

The Tiruppur Corporation conducted a detailed on-street parking study and survey in the area, after which the proposal to construct an MLCP at Town Hall (Kumaran Road) was included in the Smart City Initiative in the year 2019. The proposed MLCP project aims at effectively managing the parking inconveniences and commotion along Kumaran Road.

The authorities started the Town Hall MLCP project in 2019. The parking facility will contain four floors and a ground floor, with ample parking slots for bikes and cars. The MLCP can accommodate around 1200 bikes and 40 cars.

The project proposal comes with a wide range of provisions, including automatic token and toll collection booths, sufficient lighting and ventilation, restrooms, power backup, 24x7 CCTV surveillance, drinking water, rain water and sewage systems, smoke exhaust, and maintenance programs.

Currently, the flooring concrete work is in progress on the 3rd and 4th floors of the building. The total investment for this project is Rs. 12.02 crore. The ongoing work is expected to be completed soon, and the MLCP will be open for public use in the near future.

பல நிலை வாகன நிறுத்துமிடம் (MLCP) @ டவுன் ஹால்

திருப்பூரில் உள்ள டவுன்ஹாலில் (குமரன் சாலை) வரவிருக்கும் பல நிலை வாகன நிறுத்துமிடம் (Multi-level car parking) ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும். திட்ட தளம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டவுடன், மாவட்டத்தின் மிகவும் முக்கியமான மற்றும் பரபரப்பான பகுதியின் பார்க்கிங் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும் ஒரு குறிப்பிடத்தக்க கட்டமைப்பாக இது மாறும்.

குமரன் சாலை 0.64 கிமீ நீளம் கொண்டது மற்றும் திருப்பூரின் முக்கிய பல்பொருள் வணிக மையமாகும். எனவே, நாள் முழுவதும் பரபரப்பான போக்குவரத்து இருந்து வருகிறது. ஆனால், தற்போது இந்த பகுதியில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவது பரிதாபமாக உள்ளது.

பெரும்பாலான வணிக கட்டிடங்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக வாகன நிறுத்துமிடம் இல்லை. இது குமரன் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்த வழிவகுக்கிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி அப்பகுதியில் விரிவான வாகன நிறுத்த ஆய்வு மற்றும் கணக்கெடுப்பை நடத்தியது. அதன் பிறகு, டவுன்ஹாலில் (குமரன் சாலை) MLCP கட்டுவதற்கான முன்மொழிவு 2019 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் நகரங்கள் முயற்சியில் சேர்க்கப்பட்டது. இந்த MLCP யின் நோக்கம் குமரன் சாலையில் வாகனங்கள் நிறுத்தும் வசதியின்மையை போக்கி, நல்லதொரு வாகன நிறுத்துமிடம் உருவாக்கி, போக்குவரத்தை திறம்பட நிர்வகிப்பதாகும்.

அதிகாரிகள் டவுன் ஹால் MLCP திட்டத்தை 2019 இல் தொடங்கினர். இந்த கட்டிடத்தில் நான்கு தளங்கள் மற்றும் ஒரு தரை தளம் இருக்கும். பைக்குகள் மற்றும் கார்களுக்கு ஏராளமான பார்க்கிங் இடங்கள் இருக்கும். MLCP ஆனது சுமார் 1200 பைக்குகள் மற்றும் 40 கார்களுக்கு இடமளிக்கும்.

தானியங்கி டோக்கன் மற்றும் கட்டணம் வசூல் சாவடிகள், போதுமான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம், ஓய்வறைகள், மின் காப்பு, 24x7 கண்காணிப்பு, குடிநீர், மழை நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள், புகை வெளியேற்றம் மற்றும் பராமரிப்பு திட்டங்கள் உட்பட பலவிதமான ஏற்பாடுகளுடன் திட்ட முன்மொழிவு வருகிறது.

தற்போது, கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கான மொத்த முதலீடு ரூ. 12.02 கோடி. தற்போது நடைபெற்று வரும் பணிகள் விரைவில் முடிவடைந்து, பல நிலை வாகன நிறுத்துமிடம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

BACK