Description

The “LED Street Lights” is a significant project proposed and executed under the Smart Cities Mission in the textile city of Tiruppur. As is well known, the economy of the city is concentrated primarily around the cotton trade and hosiery market. Therefore, the need for electrical energy is always in demand in the city, which paves the way for innovative strategies and technologies to meet the increasing demand.

Before the implementation of the LED Street Lights project in the city, power shortage was a major problem. Due to the increasing number of industries, new residential areas, and extension of the city limit, the need for electricity is always on the rise. The Tiruppur Corporation planned to come up with a solution to reduce the energy consumption from street lights, which will further contribute towards reducing the city’s energy expenses.

There were 31,857 street lamps in the city before the LED Streets Light project was established. Energy efficient lamps were 24,809 (78%) in number and the remaining 6,841 (22%) were conventional lamps. However, 22% of conventional lamps contributed 36% of load sharing, whereas 78% of energy efficient lamps contributed only 64% of the total load. So, the corporation decided to replace these 36% conventional lamps with energy efficient LED street light fixtures of adequate wattage.

The TSCL effectively planned to create an integrated and comprehensive approach by adopting the latest technologies and techniques and proposed the LED Street Lights project, under the Smart Cities Mission. Besides cutting down on energy expenses, the Corporation also had plans to modernize the entire street lighting infrastructure with sophisticated technologies.

The basic objective of the project is to fulfil the city’s increasing street light demand and improve the overall energy efficiency of the corporation's street lighting system. This system will lead to substantial savings in consumption of electricity without compromising quantity or quality, ultimately resulting in cost reductions and savings for the corporation.

The LED Street Lights project features energy-efficient LED lamps with energy efficient LED luminaries placed at all the major and connecting roads of the city. Adequate and required illumination is maintained on the roads of Tiruppur as per IS standards after choosing proper lamp technology. A foolproof measuring system will be in place to verify the energy savings. Tube lights and other conventional lamps on the streets have been successfully replaced with energy efficient LED luminaries.

Other crucial features of the LED Street Lights project include remote ON/OFF of lights by GPS or time-based switching and wireless monitoring and controlling of each service connection through GSM/GPRS technology. Streetlight controllers have been installed at each service connection/switching point where it is not possible to control and monitor the streetlights automatically. The new energy efficient lamps have been integrated with the existing street light controllers, wherever available.

The total budget allocated for the LED Street Lights project is Rs. 16.92 crores. The project has been successfully completed.

Testimonial

(Stake holder): I’m extremely happy about the LED lights being installed in not only the important streets but every nook and corner of the city. The energy-efficient choice has definitely elevated the security, value, and ambience of Tiruppur.

I’ve heard that LED lights are extremely energy efficient, which means there will be a lot of savings for the government in this regard. As a taxpayer, I’m glad about this initiative.

I always care for the environment. I see that LED Lights actually give out less amount of heat, which means it reduces carbon emissions. This will help the environment a lot.

I like the look and feel of these LED lights on the street. Earlier, there used to be a lot of insects around the street lights, which was not a great sight. Now, I don’t see such things, and the streets actually look good with these new energy-saving lights.

The city corporation has installed LED lights in many places in Tiruppur. In fact, the city seems more safe and secure with these bright lights everywhere. This is a great initiative!

LED தெரு விளக்குகள்

"LED தெரு விளக்குகள்" என்பது ஜவுளி நகரமான திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி மிஷனின் கீழ் முன்மொழியப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க திட்டமாகும்.

நகரத்தின் பொருளாதாரம் முதன்மையாக பருத்தி வர்த்தகம் மற்றும் உள்ளாடை சந்தையைச் சுற்றியே அமைந்துள்ளது. எனவே, மின்சார ஆற்றலின் தேவை நகரத்தில் எப்போதும் இருந்துக்கொண்டு வருகிறது. இந்த அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய புதுமையான உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இதுவே LED தெருவிளக்குகள் திட்டத்தின் முக்கிய காரணி.

நகரில் LED தெருவிளக்கு திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன், மின் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருந்தது. அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், புதிய குடியிருப்பு பகுதிகள், நகர எல்லை நீட்டிப்பு போன்ற காரணங்களால், மின் தேவை அதிகரித்துக்கொண்டே சென்றது. எனவே, திருப்பூர் மாநகராட்சி, தெரு விளக்குகள் மூலம் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்கும் தீர்வைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது நகரத்தின் எரிசக்தி செலவினங்களைக் குறைப்பதில் மேலும் பங்களிக்கும்.

LED தெரு விளக்கு திட்டம் நிறுவப்படுவதற்கு முன்பு நகரில் 31,857 தெரு விளக்குகள் இருந்தன. ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள்: 24,809 (78%); வழக்கமான விளக்குகள்: 6,841 (22%). இருப்பினும், 22% வழக்கமான விளக்குகள் சுமை பகிர்வில் (load sharing) 36% பங்களித்தன. அதே சமயம் 78% ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் மொத்த சுமையில் 64% பங்களித்தன. எனவே, இந்த 36% வழக்கமான விளக்குகளுக்குப் பதிலாக போதுமான வாட்டேஜ் கொண்ட ஆற்றல் திறன் கொண்ட LED தெரு விளக்குகளை பொருத்துவதற்கு மாநகராட்சி முடிவு செய்தது.

அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான அணுகுமுறையை உருவாக்க TSCL திறம்பட திட்டமிட்டது மற்றும் ஸ்மார்ட் நகரம் மிஷனின் கீழ் LED தெரு விளக்குகள் திட்டத்தை முன்மொழிந்தது. எரிசக்தி செலவினங்களைக் குறைப்பதைத் தவிர, முழு தெரு விளக்கு உள்கட்டமைப்பையும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் நவீனமயமாக்கும் திட்டங்களையும் மாநகராட்சி கொண்டிருந்தது.

நகரின் அதிகரித்து வரும் தெருவிளக்கு தேவையை பூர்த்தி செய்வதும், மாநகராட்சியின் தெருவிளக்கு அமைப்பின் ஒட்டுமொத்த ஆற்றல் திறனை மேம்படுத்துவதும் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்த முறையானது அளவு அல்லது தரத்தில் சமரசம் செய்யாமல் மின் நுகர்வில் கணிசமான சேமிப்புக்கு வழிவகுக்கும். இறுதியில் மாநகராட்சிக்கு செலவுக் குறைப்பு மற்றும் சேமிப்பை ஏற்படுத்தும்.

LED தெரு விளக்குகள் திட்டமானது, நகரின் அனைத்து முக்கிய மற்றும் இணைக்கும் சாலைகளிலும் ஆற்றல் திறன் கொண்ட LED விளக்குகளை நிறுவுகிறது. முறையான விளக்கு தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, IS தரநிலைகளின்படி திருப்பூர் சாலைகளில் போதுமான மற்றும் தேவையான வெளிச்சம் பராமரிக்கப்படுகிறது. ஆற்றல் சேமிப்பை சரிபார்க்க ஒரு நம்பகமான அளவீட்டு அமைப்பு இருக்கும். தெருக்களில் உள்ள டியூப் லைட்கள் மற்றும் பிற வழக்கமான விளக்குகள் ஆற்றல் திறன் கொண்ட LED விளக்குகள் கொண்டு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளன.

LED தெரு விளக்குகள் திட்டத்தின் மற்ற முக்கிய அம்சங்களில் GPS மூலம் தொலைவியக்கி (remote) விளக்குகள் அல்லது நேர அடிப்படையிலான மாறுதல் மற்றும் வயர்லெஸ் கண்காணிப்பு மற்றும் GSM/GPRS தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு சேவை இணைப்பையும் கட்டுப்படுத்துதல் ஆகியவை அடங்கும். தெருவிளக்குகளைத் தானாகக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் இயலாத ஒவ்வொரு சேவை இணைப்பு/மாற்றுப் புள்ளியிலும் தெருவிளக்குக் கட்டுப்படுத்திகள் நிறுவப்பட்டுள்ளன. புதிய ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் தற்போதுள்ள தெரு விளக்குக் கட்டுப்பாட்டாளர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

LED தெரு விளக்குகள் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட் ரூ. 16.92 கோடி. திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

சான்றுகள்

1. (பங்குதாரர்): முக்கியமான தெருக்களில் மட்டுமின்றி நகரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் LED விளக்குகள் நிறுவப்பட்டிருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆற்றல்-திறனுள்ள இந்த விளக்குகள் திருப்பூரின் பாதுகாப்பு, மதிப்பு மற்றும் சுற்றுப்புறத்தை நிச்சயமாக உயர்த்தியுள்ளது.

2. LED விளக்குகள் மிகவும் ஆற்றல் திறன் கொண்டவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது இந்த விஷயத்தில் அரசாங்கத்திற்கு நிறைய சேமிப்பு இருக்கும். ஒரு வரி செலுத்துபவராக, இந்த முயற்சியைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

3. நான் எப்போதும் சுற்றுச்சூழலில் அக்கறை கொள்பவனாகவே இருந்திருக்கிறேன். LED விளக்குகள் உண்மையில் குறைந்த அளவு வெப்பத்தை வெளியிடுவதை நான் காண்கிறேன், அதாவது இது கார்பன் உமிழ்வைக் குறைக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு பெரிதும் உதவும்.

4. தெருவில் உள்ள இந்த LED விளக்குகளின் தோற்றமும் உணர்வும் எனக்கு பிடித்திருக்கிறது. முன்பெல்லாம் தெரு விளக்குகளைச் சுற்றி நிறைய பூச்சிகள் இருந்ததால், அது நன்றாக இருக்காது. இப்போது, நான் அத்தகைய விஷயங்களைப் பார்ப்பதில்லை. மேலும், இந்த புதிய ஆற்றல் சேமிப்பு விளக்குகளுடன் தெருக்கள் உண்மையில் அழகாக இருக்கின்றன.

5.திருப்பூரில் பல இடங்களில் மாநகராட்சி LED விளக்குகளை பொருத்தியுள்ளது. உண்மையில், எல்லா இடங்களிலும் இந்த பிரகாசமான விளக்குகளால் நகரம் மிகவும் பாதுகாப்பாக தெரிகிறது. இது ஒரு சிறந்த முயற்சி!

BACK