Knowledge Centre and Study Centre

The Knowledge Centre and Study Centre project is an important part of the Smart City Initiative in the city of Tiruppur. The knowledge centre-cum-library is sure to make a positive difference among the student population in the city.

As far as Tiruppur is concerned, it is a significant industrial city in the country. Besides, the density of population in the city is really high. However, there wasn’t a large public library and knowledge centre in the city to fulfil the needs of students appearing for competitive exams and others who wished to have a public library to access and read books, magazines, newspapers, and other sources of knowledge and information.

To make sure there is a well-equipped knowledge and study centre that is easily accessible for the public, the corporation proposed the construction of a knowledge and study centre in Tiruppur. The fact that a knowledge centre with a library plays a crucial role in the society by providing access to resources and information, supporting education and literacy, promoting lifelong learning, and serving as a gather place for the general public.

The knowledge and study centre, proposed under the Smart Cities Mission, is being constructed in the heart of the city, at Nanjappa Municipal Boys Higher Secondary School in Rayapuram, Tiruppur. The main objective of the construction of this modern knowledge centre cum library is to benefit students from all backgrounds preparing for competitive exams.

The knowledge centre is being planned in such a way that it will comprise training classes and e-learning platforms besides a vast range of books, magazines, newspapers, journals, articles, and question banks. The centre will pave the way for the aspiring student community to empower themselves with information and knowledge from varied sources.

The planning of the knowledge centre focuses on sustainability and energy efficiency to create a vibrant outlook for the building. Steps are taken to provide sufficient cross ventilation and natural lighting to develop a calm and serene environment, most suitable for learning.

The knowledge and study centre will feature an entrance lobby, a computer zone for e-learning, a general reading room with adequate furniture and a vast set of reading material, fans, lighting, drinking water facilities, power backup, a children activity area, toilet, and a proper sewage disposal system.

The construction of the knowledge centre is in the verge of completion and will be soon open for public use.

அறிவு மற்றும் ஆய்வு மையம்

திருப்பூர் நகரின் ஸ்மார்ட் சிட்டி முயற்சியின் முக்கிய பகுதியாக அறிவு மற்றும் ஆய்வு மையம் திட்டம் உள்ளது. அறிவு மையமும் நூலகமும் நகரத்தில் உள்ள மாணவர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

திருப்பூரை பொறுத்த வரை, நாட்டிலேயே குறிப்பிடத்தக்க தொழில் நகரமாக விளங்குகிறது. மேலும், நகரத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இருப்பினும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் மற்றும் பிற அறிவு ஆதாரங்களை அணுகவும், படிக்கவும், மேலும் ஒரு பொது நூலகத்தின் பயன்களை அனுபவிக்க விரும்பும் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நகரத்தில் ஒரு பெரிய பொது நூலகம் மற்றும் அறிவு மையம் இருந்ததில்லை.

பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய அறிவு மற்றும் படிப்பு மையம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய, திருப்பூரில் அறிவு மற்றும் ஆய்வு மையம் கட்ட மாநகராட்சி முன்மொழிந்தது. ஆதாரங்கள் மற்றும் தகவல்களுக்கான அணுகலை வழங்குவதன் மூலமும், கல்வி மற்றும் எழுத்தறிவை ஆதரிப்பதன் மூலமும், வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிப்பதன் மூலமும், பொது மக்கள் கூடும் இடமாக சேவை செய்வதன் மூலமும் ஒரு நூலகத்துடன் கூடிய அறிவு மையம் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஸ்மார்ட் நகரம் திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட அறிவு மற்றும் ஆய்வு மையம், திருப்பூர் ராயபுரத்தில் உள்ள நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நகரின் மையப்பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நவீன அறிவு மைய நூலகத்தை நிர்மாணிப்பதன் முக்கிய நோக்கம், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் அனைத்துப் பின்னணியில் உள்ள மாணவர்களுக்கும் பயனளிப்பதாகும்.

புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், ஆய்வு பத்திரிக்கைகள், கட்டுரைகள் மற்றும் கேள்வி வங்கிகள் தவிர, பயிற்சி வகுப்புகள் மற்றும் மின்-கற்றல் தளங்களை உள்ளடக்கிய வகையில் அறிவு மையம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர் சமூகம் பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல் மற்றும் அறிவு மூலம் தங்களை மேம்படுத்திக்கொள்ள இந்த மையம் வழி வகுக்கும்.

அறிவு மையத்தின் திட்டமிடல் கட்டிடத்திற்கான துடிப்பான கண்ணோட்டத்தை உருவாக்க நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. கற்றலுக்கு மிகவும் பொருத்தமான, அமைதியான சூழலை உருவாக்க போதுமான காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இருக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறிவு மற்றும் ஆய்வு மையத்தில் நுழைவு அறை (lobby), மின் கற்றலுக்கான கணினி மண்டலம், போதுமான தளபாடங்கள் கொண்ட பொது வாசிப்பு அறை மற்றும் பரந்த அளவிலான வாசிப்புப் பொருட்கள், மின்விசிறிகள், விளக்குகள், குடிநீர் வசதிகள், மின்சார காப்பு உபகரணம், குழந்தைகளுக்கான தனிப்பகுதி, கழிப்பறை, மற்றும் முறையான கழிவுநீர் அகற்றும் அமைப்பு ஆகியவை இடம்பெரும்.

அறிவு மையத்தின் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

BACK